இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் இருதரப்பு துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தார் - தலிபான்கள்

0 2657
இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் இருதரப்பு துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தார்

ஆப்கானிஸ்தானில், இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக், அரசு படைகளுடனான மோதலின் போது இருதரப்பு துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தார் என்று தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது.

கள நிலவரம் குறித்து செய்தி சேகரிக்க தங்களது ஒத்துழைப்பை அவர் பெறவில்லை என்றும், அவரை தாங்கள் தான் சுட்டுக் கொன்றதாக சொல்வது தவறானது என்றும் மீண்டும் அந்த அமைப்பு மறுத்துள்ளது.

சித்திக்கை தலிபான் பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து கொன்றதாக கூறப்பட்ட நிலையில், அவ்வாறு தாங்கள் செய்யவில்லை என்றும், தங்கள் மீது பழிபோடுவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments