மேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0 2679

ஊரடங்கு காலத்தில் மேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை சராசரியை விட 25சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு ஊரடங்கின் போது இருந்த திருமண வலைதள வளர்ச்சி, இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. கொரோனா முதல் அலையில், திருமண வலைதள நிறுவனங்கள் 35 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

புதிதாக திருமண வலைதளத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே பதிவு செய்து திருமணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை என இரண்டுமே கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நேரடியாக சந்திப்பது கடினம் என்பதால் திருமண வலைதளங்கள் தங்கள் இணையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments