தாயின் கவனக்குறைவால் மூன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த பரிதாபம்

0 2962
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயின் கவனக்குறைவால் மூன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயின் கவனக்குறைவால் மூன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

ஏழாயிரம்பண்ணை கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷின் மனைவி கல்பனா, தனது மூன்றரை வயது பெண் குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.

குழந்தையை கிணற்றின் பக்கத்தில் விட்டுவிட்டு கல்பனா வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற சென்ற நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, கிணற்றின் சேதமடைந்த பகுதி வழியாக உள்ளே விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments