தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2001
தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், சென்னையில் மட்டும் ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், சென்னையில் மட்டும் ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ஜூன் மாதத்திற்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தில் இனி தடுப்பூசி செலுத்த முடியும் என்றார்.

தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து தெரிவிக்க கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என அமைச்சர் பதிலளித்தார்.

அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது என்றும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments