தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா? முதலமைச்சர் ஆலோசனை

0 7686

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அதன்பின் தளர்வில்லா ஊரடங்கு என நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததைவிடப் பாதியாகக் குறைந்துள்ளது. இதையடுத்துக் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், மின்பொருட்கள் கடைகள், வன்பொருட்கள் கடைகள் திறந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு ஜூன் 14ஆம் நாள் காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இப்போதைய கொரோனா நிலவரம் குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்றும், ஊரடங்கை நீட்டித்தால் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஓரிரு நாட்களில் தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments