ஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி

0 4560
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு மத்திய, அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நோய் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். தேவையான நேரத்தில் உரிய ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆக்சிஜன் சப்ளை குறித்து மாநில முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் அளித்த பிரதமர், ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனும் மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மருந்து மற்றும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுகள் ஒருங்கிணைந்தும், ஒன்று பட்டும் செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். கள்ளசந்தையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கூறினார்.

ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகளை எந்த மாநிலமும் தடுத்து நிறுத்தக்கூடாது என்ற அவர், ஆக்சிஜன் வினியோகத்தை முறைப்படுத்த உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்றார். மத்திய அரசின் ஒருங்கிணைப்பு குழு, மாநில அரசின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமென அவர் குறிப்பிட்டார்.

ஆக்சிஜன் லாரிகளின் பயண நேரத்தை குறிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மோடி தெரிவித்தார். இதன் பின்னர் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments