சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை

0 10879
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் செல்போனுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக திமுக பிரமுகர் ஒருவரை வீடு புகுந்து உறவினர்கள் புரட்டி எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சோம செல்வப்பாண்டி திமுகவின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் மாவட்ட நெசவாளர் பிரிவு துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

குடும்பத்தைப் பிரிந்து தனியே வசித்து வரும் சோம செல்வபாண்டி, அதே பகுதியிலுள்ள சிறிய உணவகம் ஒன்றில் நாள்தோறும் உணவு உண்பது வழக்கம். பல ஆண்டுகால நட்பால், அந்த உணவக உரிமையாளரின் குடும்பத்தினர் அவரை சித்தப்பா, மாமா என உறவு வைத்து அழைக்கும் அளவுக்கு நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் அந்த உணவக உரிமையாளரின் மகளின் செல்போனுக்கு கடந்த சில நாட்களாக சோம செல்வபாண்டி ஆபாச வீடியோக்களை அனுப்பியும் போன் செய்து ஆபாசமாகப் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தெரியவந்து சிறுமியின் உறவினர்கள் சோம செல்வபாண்டியின் வீடு புகுந்து அவரை சரமாரியாகத் தாக்கினர். சிறுமியின் எதிர்காலம் கருதி குடும்பத்தினர் இதுவரை போலீசில் புகாரளிக்கவில்லை .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments