இன்று மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வருகை

0 849
இன்று மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வருகை

புனேவில் இருந்து மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று தமிழகம் வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை, தமிழகத்துக்கு 52லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 8லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் புனேவில் இருந்து 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்த நிலையில், மேலும் 2லட்சம் டோஸ்கள் இன்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 50லட்சத்து 23ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments