"தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்" :சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0 1532
"தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்" :சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பகல் நேர வெப்பநிலை அதிகமாக உயருமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், பகல் நேர வெப்பநிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாகவும் வியர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments