கியூப்ஸை கொண்டு ரஜினியின் உருவப்படத்தை வரைந்த சிறுவன்... வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!

0 7212

தனது புகைப்படத்தை க்யூப்ஸை கொண்டு வரைந்த கேரளாவைச் சேர்ந்த சிறுவனுக்கு ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 க்யூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினியின் உருவப்படத்தினை வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுவனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த சிறுவன் பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரின் உருவப்படங்களையும் க்யூப்ஸைப் பயன்படுத்தி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments