கொரோனா பரவல்: யுஜிசி நெட் தேர்வு 3ஆவது முறையாக ஒத்திவைப்பு..!

0 601
கொரோனா பரவல்: யுஜிசி நெட் தேர்வு 3ஆவது முறையாக ஒத்திவைப்பு..!

கொரோனா பரவல் காரணமாக, மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி, யுஜிசி நெட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு, தேசிய தேர்வு முகமைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவுறுத்தியிருந்தார்.

இதை ஏற்று மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருந்த நெட் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

யுஜிசி நெட் தேர்வு எழுதி தகுதி பெறுபவர்கள், உதவிப் பேராசியர் பணியிடங்களுக்கும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்புக்கும் (junior research fellowship) விண்ணப்பிக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments