தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் - தெற்கு ரயில்வே

0 4347
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் - தெற்கு ரயில்வே

ரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை மின்சார ரயில்கள் உட்பட பயணிகள் ரயில் சேவையில் எந்தவொரு மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதனதன் கால அட்டவணைப்படி தொடர்ந்து இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட காரணிகளால், சென்னை மின்சார ரயில்கள் உட்பட பயணிகள் ரயில் சேவைகளின் எண்ணிக்கைகளில் மட்டுமே மாற்றம் வரலாம் என்றும், ஒருபோதும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படாது என்றும் கூறியுள்ளது.

ரயில் சேவைகளில் மாற்றமிருந்தால், அதுகுறித்து ரயில்வே வாரியமே முடிவெடுக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments