தமிழகத்தில் அரசு பேருந்து போக்குவரத்தில் 20 ஆம் தேதி முதல் மாற்றம்

0 50997
தமிழகத்தில் இரவு 8 மணிக்குள் சென்றடையும் வகையில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரவு 8 மணிக்குள் சென்றடையும் வகையில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலாண் இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கும் வரும் குறுகிய, மற்றும் தொலைதூர பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இயக்கப்படும் என்றும், அனைத்து பேருந்துகளும் இரவு 8 மணிக்குள் அந்தந்த ஊர்களை சென்றடையும் வகையில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேர பேருந்துகள் ரத்து செய்யப்படுவதால், அவற்றில் முன்பதிவு செய்த பயணிகள்,பயண தேதிகளை மாற்றிக் கொள்ளலாம், அல்லது டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments