வாக்கு பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரம்: 4 அரசு ஊழியர்களுக்கு காவல் துறை அனுப்பிய சம்மன் வாபஸ்

0 3430
வாக்கு பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரம்: 4 அரசு ஊழியர்களுக்கு காவல் துறை அனுப்பிய சம்மன் வாபஸ்

சென்னை வேளச்சேரியில் பழுதான வாக்கு பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரத்தில், குற்ற உள்நோக்கம் எதுவுமில்லை என கூறி, நான்கு அரசு ஊழியர்களுக்கு காவல் துறை சார்பில் அனுப்பப்பட்ட சம்மன் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அலட்சியத்தால் நடைபெற்றதே தவிர, இதில் குற்ற முகாந்திரம் எதுவும் இல்லை என நிரூபணமாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் மாநகராட்சி உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட சம்மன் வாபஸ் பெறப்பட்டது என வேளச்சேரி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments