எனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்!

0 112745

 பெற்றோர் மூலம் தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி குளித்தலை காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தெலுங்குபட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சரவணகுமார். பி.ஈ பட்டதாரியான இவர், தற்போது மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .

சரவணக்குமாரும், இவரது உறவினர் பெண்ணான திருச்சி தாளகுடியைச் சேர்ந்த மாஜி ராணுவ வீரர் ரவிச்சந்திரனின் மகள் சிந்தியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

மகளின் காதலுக்கு சிந்தியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர். மேலும் சிந்தியாவிற்கு வேறொரு இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த விஷயம் சிந்தியாவிற்கு தெரியவர, மலேசியாவில் வேலை பார்த்து வரும் தனது காதலனுக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த காதலன் சரவணகுமார், கடந்த 8ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊருக்கு பறந்து வந்துள்ளார். இதனையடுத்து சரவணக்குமாரின் பெற்றோர் முன்னிலையில், விராலிமலை முருகன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இத்தகவல் சிந்தியாவின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, ஆத்திரமடைந்து சிந்தியா மற்றும் சரவணக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேறு வழி தெரியாமல் பட்டதாரி காதல் ஜோடி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

புகாரின்பேரில் , காவல்துறையினர், சிந்தியாவின் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, சரவணக்குமார் - சிந்தியா இருவரும் மேஜர், ஒருமித்த கருத்தோடு காதலித்து திருமணம் செய்துள்ளனர் என்று கூறி இருவரையும் மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments