தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்?

0 86183
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு ஏன் ?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 3986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் பலியாகி உள்ளனர். 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் தினமும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகின்றது.

தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா பரவலுக்கான கட்டுப்பாடுகளை முறையாக பின் பற்றாததால் இன்னும் இரு சில தினங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையினருடன் ஆலோசித்து, எளிய மக்களை பாதிக்காத வகையில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை ஏதும் விதிக்கப்படாது. நீலகிரி, கொடைக்கானல் ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு இபாஸ் கட்டாயம். ஓட்டல்கள், ரிசார்டுகள், கிளப்கள் இயங்கலாம்.

குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இயங்கும், மாநிலத்துக்குள் செல்லும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

அரசு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது. நீச்சல் குளம், கடற்கரை, தீம் பார்க், உயிரியல் பூங்கா அருங்காட்சியகங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகிய இடங்களில் மக்கள் கூட தடை. சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 50 விமானங்கள் மட்டுமே தரையிறங்க அனுமதி.

புறநகர் ரயில்சேவை இயங்காது. மதம் சார்ந்த சமூக அரசியல் பொழுது போக்கு கலாச்சார கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்

ஓட்டல், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி, இரவு 10 மணிவரை ஓட்டல்களில் பார்சல் சேவை வழங்கப்படலாம்.

அரசு மற்றும் அரசு சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் கொரோனா நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இயங்கலாம், வார சந்தைகள் இயங்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இயங்காது, புறநகர் ரயில் சேவை இயங்காது.

ஷோரூம்கள், ஷாப்பிங் மால், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம், சினிமா அரங்குகள் இயங்காது

மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் தேவையில்லை, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ பாஸ் கட்டாயம்.

சினிமா படப்பிடிப்பு 75 நபர்களுடன் நடத்தலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

வங்கிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்.

அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம். கொரோனா விதிகள் பின்பற்றப் படுகின்றனவா என்று கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவர்.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை உடற்பயிற்சிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.

அனைத்து வகையான கடைகளும் இரவு 8 மணிவரை இயங்க அனுமதி

* மாவட்டத்துக்குள் பேருந்து சேவை இயக்கப்படும். மற்ற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவது குறித்தும், எந்த நிறுவனங்கள் இயங்கலாம் இயங்க கூடாது என்பது குறித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் சூழ் நிலைக்கு ஏற்ப சுயமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

பொது இடங்களில் முககவசம் அணிதல் கட்டாயமாக்கப்படுவதோடு, தீவிரமாக அமல்படுத்தப்படும்

இது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றாதவர்கள் மீது பொது சுகாதாரச் சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அதன்படி அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு படிப்படியாக தமிழகத்தில் முழுமையான கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது மக்கள் பாதிக்காத வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஓரிரு நாட்களில் அமல்படுத்த இருப்பதை உறுதிபடுத்தினர். ஆனால் எவற்றிற்கு தடை, தளர்வு என்பது குறித்த தகவல்களை அதிகார பூர்வமாக பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தனர்.

கைகழுவுவதை கைவிட்டு, சமூக இடைவெளி மற்றும் முககவசத்தை மறந்து, வீதி,வீதியாக, வீடு, வீடாக ஓட்டுக்காக சுற்றித்திரிந்த அரசியல் கட்சியினரின் கூட்டத்தால், தமிழக மக்கள் மீண்டும் ஊரடங்கு என்ற கூட்டுக்குள் சிக்கி சிறை பறவையாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments