காட்டுப் பகுதியில் நக்சல் இயக்கத்தினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் உயிரிழப்பு

0 1943
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கரில் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் அவர்களை ஒடுக்குவதற்காக மத்திய ரிசர்வ் காவல்படை, மத்தியு ஆயுதக் காவல் படை ஆகியன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் தாரேம் என்னுமிடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல் இயக்கத்தினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்தச் சண்டையில் காவல் படைவீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் மாநில டிஜிபி அவஸ்தி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments