அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை கடுமையாக உயரக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை கடுமையாக உயரக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென கூறப்பட்டுள்ளது.
5 ஆம் தேதி அன்று சேலம் ,நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments