கேரளா சபாநாயகர், ஓமன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்ததாக ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம்

0 520
கேரளா சபாநாயகர், ஓமன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்ததாக ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம்

மனில் உள்ள மத்திய கிழக்கு கல்லூரியில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் முதலீடு செய்திருப்பதாக தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஸ்வப்னாவின் புகார் காரணமாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் பட்டியலில் சபாநாயகராக உள்ள ஸ்ரீராமகிருஷ்ணன் பெயர் இடம் பெறவில்லை.

திருவனந்தபுரத்தில் இருந்த ஐக்கிய அரபு அமீர தூதரகத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த அதிகாரிகளை சந்திக்க தாம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments