தேர்தல் களத்தில் புளுதி கிளப்பும் ஹெலிகாப்டர் பிரச்சாரம்..! ஒரு மணி நேரத்துக்கு ரூ 3.75 லட்சம்

0 3231
தேர்தல் களத்தில் புளுதி கிளப்பும் ஹெலிகாப்டர் பிரச்சாரம்..! ஒரு மணி நேரத்துக்கு ரூ 3.75 லட்சம்

தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வயல்காட்டில் எல்லாம் ஹெலிகாப்டரை இறக்கி ஹைடெக்காக பட்டையைகிளப்பி வரும் கமல் ஹாசனுக்கு போட்டியாக பா.ஜ.க தலைவர்களும் தற்போது ஹெலிகாப்டர் பிரச்சாரத்தால் புளுதி கிளப்பி வருகின்றனர்

தமிழ் சினிமாக்களில் க்ளைமேக்ஸ் பைட்களில் மட்டுமே வியந்து பார்த்த ஹெலிகாப்ட்டரை, வயல்காட்டில் பயிர்களுக்கு நடுவே இறங்கு தளம் அமைத்து, வந்து இறக்கியவர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்..!

ஹெலிகாப்டர் வந்து இறங்குவதை காண்பதற்கும் கமல்ஹாசனை பார்ப்பதற்கும் கிராமப்புற மக்கள் ஆர்வமாக விழுந்தோடி வருகின்றனர்..!

கமல்ஹாசன் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் அவர் ஹைடெக்காக வந்து இறங்கும் ஹெலிகாப்டரை வியந்து பார்க்க மக்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகின்றது.

தற்போது அதே பாணியில் பா.ஜ.க தலைவர்களும் ஹெலிகாப்டர் பயணத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி திட்டக்குடியில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கி புளுதியை கிளப்பினார்

ஹெலிஹாப்டரில் இருந்து இறங்கி வந்த சி.டி. ரவிக்கு அருகில் உள்ள கோவில் ஒன்றில் கூட்டணி கட்சியினர் பரிவட்டம் கட்டி சிறப்பான வரவேற்பு அளித்தனர்

ஊருக்கு ஊர் கார்களில் சென்று வாக்கு சேகரித்த காலம் போய் தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால் மக்களை நேரில் சந்திக்கும் ஆவலில் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பயணிப்பதாக இருதரப்பிலும் கூறப்படுகின்றது.

தமிழகத்தை பொறுத்தவரை ஹெலிகாப்டர் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதியுடன் ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக 65 ஆயிரம் ரூபாய் முதல் 3லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஹெலிகாப்டரில் உள்ள வசதிக்கு ஏற்ப வாடகை தொகை வேறுபடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் களத்தில் பணம் இருப்பவர்கள் உயரே பறக்கிறார்கள் , அன்றாடம் உணவு தேவைக்கே பணம் தேடுபவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments