சாத்தான்குளம் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் மூவரின் மனுக்கள் தள்ளுபடி

0 1240
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல்துறையைச் சேர்ந்த 4 பேரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல்துறையைச் சேர்ந்த 4 பேரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஜாமீன் கோரிக்கையை ஏற்க மறுத்து நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments