தமிழகத்தில் பரப்புரைக்காக பிரதமர் மோடி, அமித் ஷா வர உள்ளனர் - சி.டி.ரவி

0 1762
தமிழகத்தில் பரப்புரைக்காக பிரதமர் மோடி, அமித் ஷா வர உள்ளனர் - சி.டி.ரவி

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்காகத் தமிழகத்துக்கு வர உள்ளதாக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகர் பாஜக அலுவலகத்தில் திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்னும் தலைப்பிலான புத்தகத்தை சி.டி.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக நடத்துவதாகத் தெரிவித்தார். மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்காகத் தமிழகம் வர உள்ளதாகவும், தமிழகத்துக்கான பாஜக தேர்தல் அறிக்கையை நித்தின் கட்காரி நாளை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments