இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம்

0 2135
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம்

டப்பு வருடத்தில், இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போன்று ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்பால் பலியானவர்களின் எணிக்கையும் கணிசமாக உயர்ந்து 188 ஆக அதிகரித்துள்ளது.

2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கூட, வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments