சென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு

0 1541
சென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய இந்த புத்தகக் காட்சியில், 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் அனைவரிடமும் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. முகக்கவசமும் சமூக இடைவெளியும் கட்டாயமாக்கப்பட்டன.

ஏராளமான எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் புதிய நூல்களை வெளியிட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த படைப்பாளர்கள், வாசகர்கள் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.

இன்று இரவு 9 மணியுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்கள் புத்தகக் காட்சியைப் பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments