ஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்..! கடையை காலி செய்ய மிரட்டல்

0 55022
ஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்..! கடையை காலி செய்ய மிரட்டல்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் ப்ரைடு ரைஸில் இஞ்சி குறைவாக இருப்பதாக கூறி மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மாமூலுக்காக கடை உரிமையாளரை மிரட்டும் ரவுடிகளின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பாண்டியன் என்ற ஓட்டலுக்கு சாப்பிடச்சென்ற கெழுத்திப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்ற நபர் இஞ்சி கூடுதலாக போட்டு ப்ரைட் ரைஸ் தயார் செய்ய கூறி வம்பு செய்துள்ளார்.

அவரிடம் ப்ரைடு ரைஸில் இஞ்சி அதிகமாக சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்காது என பிரைடு ரைஸ் மாஸ்டர் அமர் கூறியதால் அவரை தாக்கி விட்டு சென்றுள்ளார்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் வந்த செல்வம், கடைக்குள் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த மாஸ்டரை காலால் எட்டி உதைத்து அடித்து மிரட்டியுள்ளார்

இது போதாதென்று கடையில் இருந்த சேர்களை தூக்கி வீசி அடித்து காயப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மாஸ்டர் அமரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து தான் 5 வருடமாக வேலை பார்த்துவரும் ஓட்டலில் மாமூல் வாசூலிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செல்வத்தின் பின்னணியில் உள்ள சில ரவுடிகள் கடையின் உரிமையாளரிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். அத்தோடில்லாமல், கட்டிடத்தின் உரிமையாளரிடம் தங்களை பகைத்துக் கொண்ட வெளியூர் காரருக்கு கடையை வாடகைக்கு விடக்கூடாது என்று மிரட்டி கடையை காலி செய்ய சொன்னதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்வம் தொடர்பாக குன்றத்தூர் காவல் ஆய்வாளர் விசாரித்து வருகின்றார்.

தேர்தலுக்கு முன்பாக 4 பிரிவுகளிலும் இடம் பெற்றுள்ள ரவுடிகள் அனைவரையும் முன் எச்சரிக்கையாக கைது செய்து ஜெயிலில் அடைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மயிலாப்பூர் டைகர் சிவக்குமார் கொலை, ஓட்டலில் தாக்குதல் என ரவுடிகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments