காங். போட்டியிடும் தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்பது குறித்து நாளை இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளாக 25 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை அக்கட்சி தயாரித்துள்ளது. காரைக்குடி, மொடக்குறிச்சி, தொண்டாமுத்தூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, கலசப்பாக்கம், ஆத்தூர், முதுகுளத்தூர், தாராபுரம், உதகை, வேதாரண்யம், முசிறி, ஸ்ரீபெரும்பதூர், மயிலாப்பூர், மதுரை மேற்கு, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, ஓசூர், வாணியம்பாடி, சூலூர்,கடையநல்லூர், ஓமலூர், அறந்தாங்கி ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட 25 தொகுதிகளை ஒதுக்குமாறு நாளைய பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. சீட்டும் காங்கிரஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என திமுக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
Comments