30 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள்..! கோவையைச் சேர்ந்த மாரிமுத்து யோகநாதனுக்கு குவியும் பாராட்டுகள்

0 12971
30 ஆண்டுகளில் 3 லட்சம் மரக்கன்றுகள்..! கோவையைச் சேர்ந்த மாரிமுத்து யோகநாதனுக்கு குவியும் பாராட்டுகள்

Tree men என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துனரான மாரிமுத்து யோகநாதனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த 30ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு இயற்கையுடன் அவர் வாழ்ந்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான மாரிமுத்து, தன் சம்பளப் பணத்தில் 40 சதவீதத்தை மரக்கன்றுகளை வாங்குவதற்கு பயன்படுத்துகிறார். மேலும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளையும் அவர் வழங்கி வருகிறார். முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிடமிருந்து eco warrior விருதும், தமிழக அரசின் சத்ரு சுஜால் சேவை வீரர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments