"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்" -தமிழக பள்ளி தேர்வுகள் துறை அறிவிப்பு

0 4543
"தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும்" -தமிழக பள்ளி தேர்வுகள் துறை அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 17-ம் தேதி அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி தொடங்கி, அதே மாதம் 21-ந் தேதியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்துன.

ஆனால் திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments