அதிமுக விருப்பமனு விநியோகம் நிறைவு ; சுமார் 8,240 பேர் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம்

0 1517
அதிமுக விருப்பமனு விநியோகம் நிறைவு ; சுமார் 8,240 பேர் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம்

திமுகவில் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் 8 ஆயிரத்து 240 பேர் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்யும் பணியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் உத்தேச பட்டியலும் அதிமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னர், பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்கலாம் என்பதை அதிமுக முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று இரவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை என்றார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளுக்குள்ளும், பாஜகவுக்கு 24 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இறுதி நாள் என்பதால், விருப்ப மனு அளிப்பதற்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஒரே நேரத்தில் ஏராமானோர் வாகனங்களுடன் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 240 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments