ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பன்னாட்டு போர் பயிற்சியில் பங்கேற்கிறது இந்திய விமானப்படை

0 1491
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பன்னாட்டு போர் பயிற்சியில் பங்கேற்கிறது இந்திய விமானப்படை

10 நாடுகளின் விமானப் படைகள் இணைந்து நடத்தும் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படை விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா உள்பட 10 நாடுகளின் விமானப் படைகள் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சி வருகிற 3 ஆம் தேதி தொடங்கி 3 வாரங்கள் நடைபெற இருக்கிறது.

அதில் இந்திய விமானப் படையும் கலந்து கொள்ள இருக்கிறது. இந்திய படையில் உள்ள சுகாய் 30 எம்கேஐ ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் மற்றும் சரக்குகளை கையாள உதவும் சி 17 ரகத்தை சேர்ந்த 2 விமானங்களும் ஒத்திகையில் இடம்பெறுவதற்காக புறப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments