பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிசோர் நியமனம்

பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிசோர் நியமனம்
அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுப்பவரான பிரசாந்த் கிசோர் பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிசோர் 2017ஆம் ஆண்டில் பஞ்சாபில் காங்கிரசுக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் சட்டமன்றத் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்கும் பணியைப் பிரசாந்த் கிசோர் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரசாந்த் கிசோரைப் பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக அமரீந்தர் சிங் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கும் அவருக்கு கேபினட் அமைச்சருக்கான தகுதி கொடுப்பதற்கும் பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Comments