டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..!

0 2092

 

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றச்சாட்டில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அவர் தவறாக நடக்க முயன்ற புகார் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதுடன், ராஜேஷ் தாசின் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி  டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். மேலும் புகார் அளிக்க சென்னைக்கு வரும் வழியில், பெண் அதிகாரியை போலீஸ் படையுடன் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments