பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ? : விரைவில் தெரிய வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னையில் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இரவு, சென்னை திரும்பினார். கிண்டி ஐடிசி கிராண் சோழா நட்சத்திர ஹோட்டலில், அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் சந்தித்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே, அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை முடிவடைந்திருந்தது. எனவே, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது ? என்பதை இந்த கூட்டத்தில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments