கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்குள் புகுந்த முதலை : 11 அடி முதலையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

0 1235
கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்குள் புகுந்த முதலை : 11 அடி முதலையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

குஜராத் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்குள் புகுந்த 11 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் மீட்டனர்.

வதோதரா (Vadodara) நகரில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த பகுதியில் உள்ள ஒரு குழிக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்த ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் குழிக்குள் கிடந்த முதலையை கயிறு கட்டி மேலே இழுத்து வந்து கூண்டு வைத்து பிடித்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments