கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - தமிழக அரசு

0 3507
கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், “கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி இல்லாவிட்டாலும் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments