பாகிஸ்தானில் ரோலர் பிளேட் காவல்படையினர் அறிமுகம்

பாகிஸ்தானில் ரோலர் பிளேட் காவல்படையினர் அறிமுகம்
பாகிஸ்தானில் ரோலர் பிளேட் எனப்படும் புதிய காவல் படையினர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
காலனியில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு அதிவேகமாகச் செயல்படும் ஆயுதமேந்திய இந்தப் படையினர் நகரின் முக்கிய சந்திப்புகள், கடற்கரைச் சாலைகள் மற்றும் பெரும் வணிக வளாகங்களில் நிறுத்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கராச்சி நகரில் நிறுத்தப்பட்டுள்ள இந்தப் படையினர் திருட்டு, பெண்கள் துன்புறுத்தல் தொடர்பான குற்றவாளிகள் மோட்டார் சைக்கிளில் சென்றாலும், இவர்களால் விரைந்து பிடிக்க இயலும் எனவும், இதற்காக ஆண் மற்றும் பெண் காவலர்கள் 20 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments