ஆர்வக்கோளாறில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த நபர்...கரண்ட் போனதால் கடுப்பான மக்கள்!

0 19760

உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு வகையான எக்சர்சைஸ் செய்வது வழக்கம் தான். அன்றாடம் உடற்பயிற்சி செய்து, கட்டுக்கோப்புடன் உடலை வைத்திருப்பது நல்ல பழக்கம். சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் காசு கட்டி ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் சீனாவில் ஒருவர், சற்று வித்தியாசமாகவே உடற்பயிற்சி செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தென் மேற்கு சீனாவின் செங்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கு இருந்த மின் கம்பம் ஒன்றில் திடீரென ஏறத் தொடங்கினார். கம்பத்தின் உச்சிக்குச் சென்ற அவர், சிட் அப்ஸ் செய்யத் தொடங்கியதும், சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பாக்கத்தொடங்கினர்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் , மின்சாரத்துறை ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க, அந்த அடையாளம் தெரியாத நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அறிவிப்பில்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செங்டு பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10 ,000 வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் அறிந்து வந்த செங்டு போலீசார், ஆர்வக்கோளாறில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் , வீடியோ வைரல் ஆகத் தொடங்கியதும், அந்த நபரைப் பின்பற்றி யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஊடகங்கள் வாயிலாக காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments