தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்களை, ஆட்டோவில் கடத்த முயற்சித்த இரு மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சி பதிவை வைத்து போலீசார் விசாரணை

0 1902

சென்னை பட்டினப்பாக்கத்தில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்களை, ஆட்டோவில் வந்த இரு மர்ம நபர்கள் கடத்தி செல்ல முயற்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ராஜா தெருவில் சிறார்கள் விளையாடிய போது, ஆட்டோவில் வந்த இரு நபர்கள், நைசாக பேச்சுக்கொடுத்து, வண்ண கைகுட்டைகளை அளித்து, கண்ணாமூச்சி விளையாட கூறி உள்ளனர்.

சுதாரித்துகொண்ட ஒரு சிறுமி மூதாட்டி ஒருவரை அழைத்து வந்ததையடுத்து, இரு மர்ம நபர்களும் ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ள ஆட்டோ எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments