அண்ணன் சீனிவாசன் மட்டும் கைதட்றாரு.... எல்லோரும் கைதட்டுங்க!- பட்ஜெட்டுக்கு இடையே ஜாலியான ஓ.பி.எஸ்
இன்று நடைப்பெற்ற இடைக்கால பட்ஜெட் உரையின் போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை குறிப்பிட்டு அண்ணன் மட்டும் கை தட்டுறாரு, எல்லாரும் கை தட்டுங்க என துணை முதலமைச்சர் கூறியது நகைப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது நிதிநிலை அறிக்கையை வாசித்த அவர் வனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சுற்றுசூழல் மாசை குறைக்க மரம் நடும் திட்டத்தை 2011-2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடப்பட்ட 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
துணை முதல்வரின் வனத்துறை குறித்தான இந்த அறிவிப்புக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். இதை கவனித்த துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு, எல்லாரும் கைதட்டுங்களேன்; பாவம் அண்ணன் மட்டும் தான் கைதட்டிட்டு இருக்காரு ” என்று கூறி சிரிக்க, மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கைதட்ட தொடங்கினர்,.
பட்ஜெட் குறித்தான உரையின் போது, நடைப்பெற்ற இந்த சுவாரஸ்யமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Comments