தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் 7.2 சதவீதமாக குறைந்து விட்டது - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் என சுட்டிக்காட்டி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments