ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி

0 2017
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி

ஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

கிறிஸ்ட்சர்ச்-சில் (Christchurch) நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் கான்வே (Conway) 59 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா 17.3 ஓவரில், 131 ரன்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி (Ish Sodhi) 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments