அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

0 1610
அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை முறைப்படி அறிவிக்கும் என்றார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், திமுக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments