ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய அரசு விரைவில் வெளியிடும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

0 1006
ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய அரசு விரைவில் வெளியிடும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஓடிடி' தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து பேசிய அவர், ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள், புகார்கள் வரப்பெற்றுள்ளன என்றார்.

இதுதொடர்பான வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் ஏறக்குறைய தயாராகிவிட்டன என்றும் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments