தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழ்நாட்டில் ஆன்-லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் மசோதாவைச் சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
இணைய வழியில் பணத்தைக் கட்டிச் சூதாட்டத்தில் ஈடுபட்ட பலர் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தில் அதிகரித்தன. இதையடுத்து இணையவழியில் பணம் வைத்து விளையாடும் அனைத்துச் சூதாட்டங்களையும் தடை செய்ய நவம்பர் மாதத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டமசோதாவைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தடையை மீறிச் சூதாடுவோருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
Comments