டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிர்- பனிமூட்டம்; பார்வைப் புலப்பாடு குறைந்ததால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கம்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிர்- பனிமூட்டம்; பார்வைப் புலப்பாடு குறைந்ததால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கம்
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவுகிறது. டெல்லியில் அதிகாலை ஐந்தரை மணிக்குக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளதால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளதால் வடக்கு ரயில்வேக்குட்பட்ட 17 விரைவு ரயில்கள் பலமணி நேரம் தாமதமாகச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments