'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா?’ - கணவனைக் கத்தியால் குத்திய பெண் ஷாக்!

0 5507

னது கணவரின் மொபைல் போனில் இருந்த  வீடியோ மற்றும் புகைப் படங்களைப் பார்த்துக் கோபமடைந்த, மெக்சிகோ பெண் ஒருவர், “நான் இருக்கறப்பவே உனக்கு வேறொரு பெண் கேட்குதா?’’ என்று கூறி கணவனைக் கத்தியால் குத்தியுள்ளார். மொபைலில் இருந்த பெண் யார் என்று அறிந்ததும் கணவனிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் அந்தப் பெண். மொபைலில் இருந்த பெண் யார் என்று அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் ஜூயன். இவரது மனைவி லியோனோரா. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தனது கணவன் ஜூயன் பெண் ஒருவருடம் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்த லியோனோரா கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். கணவனிடம் என்ன, ஏது என்று விசாரிக்காமல் சமையல் செய்யும் கத்தியை எடுத்த லியோனோரா ஜூயனின் கை, கால் என்று சகட்டு மேனிக்குக் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக் குத்து வாங்கிய ஜூயன் கத்தியபடி, மனைவியைத் தடுத்து நிறுத்தி கத்தியைப் பிடுங்கி வீசிவிட்டு, “எந்த புகைப்படம், எந்த வீடியோ?” என்று கேட்டுள்ளார். லியோனோரா மொபைல் போனில் இருந்த புகைப் படங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

அதைப் பார்த்த ஜூயன், சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியாமல், “இது நாம் இருவரும் டேட்டிங் செய்த போது எடுத்த வீடியோ. நன்றாக உற்றுப் பார். இதில் இருப்பது நீ தான்” என்று வலி தாங்க முடியாமல் கூறியுள்ளார். அந்த வீடியோவை உற்றுப் பார்த்த பிறகுதான் லியோனோராவுக்கு உண்மை நிலை தெரியவந்தது. வீடியோவில் இளமையாகவும், சற்றே ஒல்லியாகவும் இருந்ததால் லியோனோராவுக்கு உடனடியாக தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. கணநேர ஆத்திரம் அவரது கண்ணை மட்டுமல்லாமல் அறிவையும் மழுங்கடித்துவிட்டது. உண்மை புரிந்ததும், தனது கணவனிடம் மன்னிப்பு கோரினார்.

இந்த சூழலில், ஜூயோன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து லியோனோரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜூயோன் கத்திக் குத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் வீடு திரும்பி தனது மனைவியுடன் வாழ்க்கையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments