சபரிமலை ஐயப்பன் கோவிலில் தீபாராதனைக்குப் பின் மகரஜோதி வழிபாடு

0 1189

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடிய பக்தர்கள் பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகரஜோதியைக் கண்டு வழிபட்டனர்.

பந்தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணப் பெட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையில் வந்து சேர்ந்தது. ஐயப்பன் சிலைக்கு ஆபரணங்களை அணிவித்த பின் நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.

தீபாராதனை முடிந்தபின் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி காட்சியளித்தது. அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் மகரஜோதியைக் கண்டு வழிபட்டனர்.

கொரோனா சூழலில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே மகரஜோதி வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments