திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

பெண்களை அவமதித்த புகாரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்களை அவமதித்த புகாரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் சசிகலா குறித்து பேசியது சர்ச்சையானது. பெண்களை அவமதிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பதாக வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் புகார் அளித்தார்.
இதையடுத்து கலகத்தை தூண்டுவது, ஆபாசமாக பேசுவது, பொது இடத்தில் பெண்களை அவமதிப்பது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments