அரியானூரில் ரூ.45 கோடியில் புதிய மேம்பாலம்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

அரியானூரில் ரூ.45 கோடியில் புதிய மேம்பாலம்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
சேலம் அருகே அரியானூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை போக்க 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகும்.
இதனை குறைக்கவும் விபத்துக்கள் நடக்காமல் தடுக்கவும் அரசு சார்பில் 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. தூண்கள் கட்டி முடித்து, அவற்றின் மேல் தளம் அமைக்கும் பணிகள் முடிந்து வண்ணம் பூசப்பட்டு மேம்பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments