நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு

0 150

சென்னை எண்ணூரில் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மோகன் மற்றும் காசிமேட்டைச் சேர்ந்த லியோ இருவரும் அதிகாலை இருசக்கர வாகனத்தில் எண்ணூர் விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

ராமகிருஷ்ணா நகர் அருகே எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

மாதவரம் போக்குவரத்துக் காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments